அமெரிக்காவில் லொறிக்குள் 46 சடலங்கள் மீட்பு video

Spread the love

அமெரிக்காவில் லொறிக்குள் 46 சடலங்கள் மீட்பு video

அமெரிக்கா ;அமெரிக்கா San Antonio, Texas.பகுதியில் லொறிக்குள் இறந்த நிலையில் 46 சடலங்கள் மீட்பு. கைவிட பட்ட நிலையில் இருந்த லொறியை சோதனை புரிந்த போலீசார் இறந்த சடலங்களை கண்டு அதிர்ச்சியுற்றனர் .

அமெரிக்காவுக்குள் சூடான் நாட்டு சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அதிகம் ஏற்றி வரப்பட்டுள்ளனர் .அதிக வெப்பம் காரணமாக இந்த அகதிகள் குடிக்க நீர் இன்றி மூச்சு திணறி பலியாகியுள்ளனர் .


எனினும் உயிருக்கு போராடி கொண்டிருந்த பதினாறு பேர் காப்பாற்ற பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

அமெரிக்காவில் லொறிக்குள் 46 சடலங்கள் மீட்பு video

அந்த லொறியில் இருந்து காப்பாற்ற பட்டவர்களில் சிறுவர்களும்
அடங்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மனித கடத்தல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .அமெரிக்காவுக்குள் இடம்பெற்ற இந்த சம்பவம் உலகலாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

எல்லையில் மனித கடத்தல்

அமெரிக்காவுக்குள் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்து ஆப்பிரிக்கா நாட்டவர்கள் உள்ளிட்டவர்கள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

இவ்வாறு பெரும் உயிராபத்தை மேற்கொண்டு நடத்த பட்ட பெரும் மனித கடத்தல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சடலங்கள் மீட்பு

அறுபத்தி இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இந்த லொறிக்குள் அடைத்து செல்ல பட்ட நிலையில் ஏற்பட்ட அதிக வெப்பம் ,அதனால் ஏற்பட்ட நீர் தாகம் காரணமாக இந்த அகதிகள் லொறிக்குள் இறந்துள்ள பேரவலம் இடம்பெற்றுள்ளது .

அகதிகள் அமெரிக்காவில் லொறிக்குள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ள சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

இவர்களுக்கு குடும்பம் உள்ளது நல்ல வாழ்வை வாழ ஆசை பட்டு வந்தவர்கள் உயிர் பிரிந்த துயரம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

இந்த மனித கடத்தலில் ஈடுபட்ட மூவர் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர் ,குற்றவாளிகள் நீதிமன்றில் நிறுத்த பட்டு தண்டிக்க படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் மனித கடத்தலில் ஈடுபடும் இவ்வாறான முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

கனவுகளுடன் அமெரிக்காவுக்குள் நுழைந்த அகதிகள் குடி நீர் இன்றியும் லொறிக்குள் அதிக வெப்பம் காரணமாக சுவாசிக்க முடியாது மூச்சு திணறி இறந்த பரிதாபம் மக்களை கலங்க வைத்துள்ளது .

Leave a Reply