வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படம்
ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட
படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட்
பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த
போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரம்யா பாண்டியன்
இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.