வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை
Spread the love

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை , குருநாகலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற உரிமையாளர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இன்று (31) கைது செய்துள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

குருநாகல் சூரதிஸ்ஸ மாவத்தையில் MMP என்ற பெயரில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

இங்கு, சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு நடப்பது தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 110 கடவுச்சீட்டுகள், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான சட்டவிரோத முகவர்களிடம் சிக்கி நூற்று கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறு சிலர் வீடு வேலை செய்தவர்களினால் படுகொலை செய்ய பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .