வெள்ளத்தில் மிதக்கும் மட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 531 குடும்பங்கள் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் திங்கட்கிழமை மாலை முதல்
பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.