வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை
Spread the love

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை

வெள்ளத்தில் இறந்த கோழிகள் விற்பனை .இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பறவைகள் மற்றும் விலங்குகள் என்பன நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன.

இவ்வாறு களனி ஆற்றின் கரை பகுதியாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விலங்குகள் கோழிகள் உள்ளிட்டவை சடலங்கலாக மிதந்து வருகின்றன.

இலங்கை நுகர்வு அமைச்சு எச்சரிக்கை

அவ்வாறு வெள்ள நீரில் அடித்து செல்லப்படுகின்ற கோழிகளை எடுத்து சில கும்பல்கள் அதனை சுத்தம் செய்து பொது மக்களுக்கு உணவு பண்டங்களாக விற்பனை செய்து வருவதாக இலங்கை நுகர்வு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோழிகளை உண்பதால் அதில் துர்நாற்றங்கள் வீசுவதாகவும், நோய்க்கிருமிகள் உள்ளதாகவும் எனவே கோழிகளை விரும்பி உண்ணும் மக்கள் ,இவ்வலை மிக அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த கோழிகளை உண்கின்ற பொழுது அதில் இருக்கின்ற தொற்றுநோய் மக்களுக்குள் பரவி உயர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் .

நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோழி விற்பனை

எனவே இவ்வாறான காலப் பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோழிகளை சில கும்பல்கள் விற்பனை செய்து வருவதாகவும் ,அதனால் மக்களுடைய உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது .

இவ்வளோ மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

நாட்டுக் கோழிகளே இவ்வாறு பெரும்பான்மையாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

அதனால் கோழிகள் மற்றும் விலங்குகள் உள்ளிட்டவற்றை உண்பதை மக்கள் தவிர்த்து வருமாறு அதன் ஊடாக சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே கோழி பிரியர்கள் மற்றும் விலங்கு பிரியர்களே இக்காலத்தில் மிக அவதானமாக செயல்படுங்கள்.

நீங்கள் உண்ணுகின்ற அந்த உணவில் நோய்கள் காணப்படுகின்றன அவற்றை உண்ணுகின்ற போது உங்கள் உடல் உறுப்புகள் சேதம் அடைந்து உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுகாதார அமைச்சும் நுகர்வோர் அமைச்சும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .