வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருந்த மேலும் 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
துபாயில் இருந்து நேற்று மாலை 400 பேர் வந்துள்ளனர். இவர்களுள் 7 சிறுவர்கள்
இடம்பெற்றுள்ளனர். மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜப்பான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று
இலங்கை வரமுடியாமல் அந்த நாடுகளில் சிக்கியிருந்த 425 இலங்கையர்கள்
இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
ஜப்பானில் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்த 280 இலங்கையர்கள்
டோக்கியோ நகரில் இருந்து மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தமிழ் நாடு சென்னையில் இருந்தும் 27 பேர் இலங்கை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.