வெல்வேன் ஒரு நாள் ….!

Spread the love

வெல்வேன் ஒரு நாள் ….!

தேடி வந்து தோல்விகளோ
தோளின் மேலே ஏறுது …
நாடி வரும் உயர்வுகளோ
நடு வழியில் சாகுது …..

ஏறிவிட ஓடுகிறேன்
ஏனோ தூரம் கூடுது …?
எவர் வைத்த சாபமோ
என் வாழ்வு நோகுது …?

ஆடி வரும் தென்றலும்
அடி தந்தே போகுது …..
ஊன்றி வரும் கால்களும்
உரமேற கூடாதோ ….?

கழியும் தின பொழுதுகளில்
கற்றவைகள் ஏராளம் ….
கல்லறையில் சாயும் முன்னர்
கட்டி ஆள மாட்டேனோ ..?

பட்ட வலி தொட்டு தானே
பாதை தேடுறேன் – நாளை
நக்கல் இட்ட வாய்களும்
நம்மை கண்டு வாடுமே ….

குடை பிடிக்கும் வானத்திற்கு
கூலி தந்தார் யாரிங்கு ..?
நிழல் வாழும் மாந்தரின்
நிலையான தென்னவோ .?

ஆறாம் அறிவை தட்டி
ஆழம் பார்க்கிறேன் ….
அந்தோ வரும் நாளில்
ஆகாயத்தை முட்டுவேன் …..

அன்று எந்தன் ஆட்டம் பாரு
அருகில் வந்து முட்டி பாரு ….
வணிகத்தின் தந்திரத்தை -என்னில்
வந்து வாங்கி நீயும் ஓடு ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/12/2018

Leave a Reply