வெல்வாய் ஒரு நாள் ஓடு

Spread the love

வெல்வாய் ஒரு நாள் ஓடு

பல நாள் இருளும் ஒரு நாள் மறையும்
பல முறை பலமுறை முயற்சிப்பாய் ..
வரும் வழி நகைப்பார் வலிகளை இடுவார்
வாடா நீயும் எழுவாய் ….

இருளும் ஒளியும் ஒருநேர் ஒரு நேர்
ஒன்றிடா இந்த உலகில் ….
ஒடிந்தே அழுதிடா ஓர்மம் கொள்வாய்
ஒன்றே வெற்றியில் நிற்பாய் ….

சிகரம் தொட்டவர் எல்லாம் இங்கே
சிரித்தா எழுந்தார் சொல்வாய் …?
வலிகளை கண்டு அஞ்சின் – இந்த
வாழ்வில் உயராய் காணாய்….

வெல்வாய் ஒரு நாள் ஓடு
வெல்வாய் ஒரு நாள் ஓடு

பக்குவம் நாட்டி பாரில் உயர்வாய்
பாதை காட்டும் உன்னை ….
காறி உமிழ்ந்தான் கூட உந்தன்
காலடி பணிவான் நாளை…

இது தான் வாழ்வு இது தான் வாழ்வு
இன்றே எண்ணி கொள்ளு …
இடர்கள் எல்லாம் உன்னை செதுக்கும்
இரும்பு பலமே எண்ணு….

நாளை மலரும் நாளில் ஒன்று
நாடும் உலகம் உன்னை ….
வாடா நின்று வாடா நின்று
வழிகளை தேடி ஓடு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -29/12/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply