வெல்ல போறேன் காத்திரு

வெல்ல போறேன் காத்திரு
Spread the love

வெல்ல போறேன் காத்திரு

வெல்லாய் என்ற வெற்றிடம் நிரப்பிட
வென்றிட வெற்றி தேடுகிறேன்
நாளை எந்தன் நாளென எண்ணியே
நாளுமே நாளும் ஓடுகிறேன்

பொல்லா வார்த்தைகள் எறிந்தார் வாய்களை
பொடியாக்க முனைகின்றேன்
எல்லாம் தெரிந்தார் என்றே முழங்கிய
ஏற்றத்தாரே வருகிறேன்

தடுத்தார் வழிகளை உடைத்தே
தரணியில் தலை நிமிர்ந்தேன்
இல்லா அறிவு என்றார் முன்னிலை
இயக்கம் இயம்பி நின்றேன்

வாசலில் வந்து வெற்றியில் உள்ளேன்
வரியில் எழுதி வைத்தேன்
சொன்னால் செய்திடும் வல்லமை யானாம்
சொல்லி விட்டே வெல்கின்றேன்

இதுவரை தமிழர் புரியா சாதனை
இமயமாய் நானே புரிவேன்
இழிந்த நாவும் இடித்த உரலும்
இமயம் பார்க்க வைப்பேன்

கடுகதி வேகம் காண்பீர் நீரும்
கண்ணீர் மழையில் தவள்வீர்
எப்படி வென்றான் இப்படி என்றே
எண்ணி எண்ணி துவள்வீர் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2024