வெற்ற பெற தனித்திரு

வெற்ற பெற தனித்திரு
Spread the love

வெற்ற பெற தனித்திரு

நேற்று என்னுடன் நேர்மையாய் இருந்தவர்
நெஞ்சில் ஏறி நேர் மிதித்தார்
பண்புடன் நாளுமே பழகி திரிந்தவர்
பாதியில் பகையாய் ஏனோ முளைத்தார் ..?

அன்பு காட்டியே அறநிலை சொன்னவர்
அந்தோ அவர் எதிரியாய் நின்றார்
இந்த நிலையில் இதயங்கள் மாறிட
இன்று இவ் நிலை ஏனென்று கூறார்

ஏதோ ஒன்றை ஏற்க மறுத்ததால்
எதையோ ஒன்றை எடுக்க முனைந்ததால்
ஆத்திர நிலையால் அலை கடலானர்
அக்கினி குழம்பாய் அப்படி கொதித்தார்

எத்திசை திரும்பினும் எழுந்தே வெடித்தார்
ஏனென்றெ கேள்விக்கு ஏதோ சொன்னார்
புத்தியை கிழித்தெரு புலனை மேய்ந்தால்
புன்னகை சொன்னது தப்பினாய் என்று

அப்படி சிந்தை அகலம் தந்தது
அப்படி நீயே தனித்திரு என்றது
வென்றிட தனிமையே தீரம் என்றது
வேகமாய் சிந்திக்க இதுவே உகந்தது

முடிவில் சோதனை முற்று பெற்றது
மூலமே வென்றிட தனிமையே என்றது
இறுதியில் தனிமையே எம்முடன் என்றது
இதனை உணர்ந்தே பயணி என்றது ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-04-2024