வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Spread the love

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) காலை நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.

நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்