வீர மகன் அர்ச்சுனா

வீர மகன் அர்ச்சுனா
Spread the love

வீர மகன் அர்ச்சுனா

சிறை பிடித்து என்னை மிரட்டுகிறார்
சிரித்த படி செல்கிறேன்
வலைவிரித்து என்னை அடக்குகிறார்
வாய் பேசியே செல்கிறேன்

குறை பிடித்து என்னை மடக்கிறார்
குரல் வளை மெல்ல முறிக்கிறார்
ஏது செய்தும் இன்றென்ன
எங்கள் மக்கள் துடிக்கிறார்

கறை படிந்த வாய்கள் சில
கரை ஏறி கரைகிறார்
சுய நல வாதிகளாய்
சுற்றியே அலைகின்றார்

வீர மகன் அர்ச்சுனா
விடுதலை பெறுவான்
கந்தக துகளாய் – அவன்
கட்டாயம் வெடிப்பான் .

ஆக்கம் 06-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )