வீதிக்கு வந்த அனந்தி

வீதிக்கு வந்த அனந்தி
Spread the love

வீதிக்கு வந்த அனந்தி

வீதிக்கு வந்த அனந்தி ,பொது வேட்பாளராக களமிறங்க தயார் ஆனந்தி தெரிவித்துள்ளார் .

இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் பொது வாக்காளர் ஒருவரை களமிறக்க தயாராகி வருகின்றனர் .

அந்த வழியில் இதுவரை அமைதியாக இருந்த அனந்தி அவர்கள் தற்பொழுது பொது வேட்பாளராக தான் வருவதற்கு தயார் என்று அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .

ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் அனந்தி

ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் ஆனந்தி இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .

வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கருத்தினை அவர்தெரிவித்துள்ளார் .

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் துணை பொறுப்பாளராக விளங்கிய எழிலன் மனைவியே ,ஆனந்தி அவர்கள் விளங்கி வருகின்றார் .

பொது வேட்பாளராக

அவரை இப்பொழுது பொது வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார் .

மக்கள் மத்தியில் பொது சேவைகள் விடையத்தில் அதிக அக்கறை காட்டாத ஆனந்தி திடீரென இப்பொழுது வேட்பாளராகத் தான் வருவதற்கு தயார் என்ற இந்த விடயம் பேசுபொருளாகவே மாற்றப்பட்டிருக்கின்றது.

மக்களுடைய விடயங்கள் மற்றும் மக்களை நேரடியா சந்தித்து பேசுவதற்கு மறுத்தவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது மட்டும் கரையான் புத்துக்குள் இருந்து எழுந்து வந்தவர்கள் போல திடீரென தோண்டி கருத்துக்களை வெளியிடுவது வளமையாக காணப்படுகின்றது.

இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் கட்சியினரும் இவ்வாறான விடயத்தில் அவர்கள் ஊறிப்போனவர்கள் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக காண படுகின்றனர் .

தேர்தல் வருகின்ற பொழுது வீதிக்கு வரும் இவர்களை நேரடியாக சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

இதுவே பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது .

இதுவரை எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்தி என்ன பதில் சொல்லப் போகின்றார் .

பலமுறை நாங்கள் இவரை போட்டி காண அழைத்த பொழுதும் ,அவர் எமது அழைப்புக்கு வரவில்லை என்பதை ,இங்கே தெளிவாகவே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.