வீடு எரிந்து பெண் ஒருவர் உயிரிழப்பு
வீடு எரிந்து பெண் ஒருவர் உயிரிழப்பு ,யாழ்ப்பாணம்-நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதனால் தீயில் சிக்கி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எரிந்த நிலையில் வீட்டுக்கு வௌியில் காணப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் வாசலிலே மிளகாய் தூள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்தார்களா, அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்