வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு

வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு
Spread the love

உரும்பிராயில் வாள்வெட்டு வீடு உடைப்பு

வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்குள் மர்ம வாள்வெட்டு கும்பல் ஒன்று நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது .

வீட்டுக்குள் நுழைந்த மர்ம ரவுடி கும்பல் வீட்டின் கதவை உடைத்து நுழைந்து அதனை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்த வெளிநாட்டு ஏவல் கூலி வாள்வெட்டு குழுவே தாக்குதலை நடத்திய பொழுது ,வீட்டார் அபய குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்துள்ளனர் .

அயலவர்கள் வருவதை கண்ணுற்ற தெரு ரவுடி வாள்வெட்டு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது .

இவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அயல் வீட்டுக்குள் எறிந்து விட்டு , குறித்த கும்பல் தப்பி ஓடியுள்ளதாக பாதிக்க பட்ட தரப்பில் நமக்கு தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வருகை தந்து பங்கேற்ற இளம் பெண் ஒருவர் தமது பெற்றவர்கள் வீட்டுக்குள் ரவுடிகள் தாக்குதல் நடத்துவதாக நேரலையில் தெரிவித்துள்ளார் .

அதனை அடுத்து சம்பவம் இடம்பெற்ற வேளை கோப்பாய் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலன் விரும்பிகள் விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் கலந்து கொண்ட பெண் உறவுகளை மிரட்டும் நடவவடிக்கையில் மேற்படி கூலிக்குழு ஈடுபட்டுள்ளதாக நம்ப படுகிறது .

திட்டமிடப்பட்டு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊடக வழங்க பட்ட கட்டளையை அடுத்து இந்த கூலி வாள்வெட்டு குழு வீடு புகுந்து தாக்குதலை நடத்தியாக சந்தேகிக்க படுகிறது .

போலீசார் மேற்படி விடயத்தை விசாரணை நடத்தினால் விடயம் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதிவேற்றதை அடுத்து ஒருவரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழு தாக்குதலாக இது பார்க்க முடிகிறது .

எனவே ஆளுகின்ற அனுரா குமரதிசாநாயக்க ஆட்சி பீடம் இதனை கவனத்தில் எடுத்து விசாரணைகளை நடத்தி சம்பந்த பட்டவர்களை கைது செய்யுது ,சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் என மக்கள் மன்றாடி கேட்டுக்கொள்கின்றனர் .

மேற்படி விடயம் குறித்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .