விவசாய – கடற்றொழிலாளர்களுக்கு மே மாதமும் முதல் ரூபா 5000/= ஓய்வூதியம்
சகல விவசாய மற்றும் கடற்றொழிலாளர்களை சார்ந்த ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் ரூபா 5000/= கொடுப்பனவு மே
மாதத்திலும் வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபைத் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை
சகல விவசாயிகள் / கடற்றொழிலாளர் ஓய்வூதிய பயனாளிகளுக்காக ரூபா 5000/= கொடுப்பனவை 2020 மே மாதத்திற்காக வழங்குதல்
கொவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட பொது மக்களுக்காக அதிமேதகு
ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்படும் ரூபா 5000/=, கொடுப்பனவை சகல விவசாய
ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெரும் பயனாளிகளுக்கும் இம்முறையும் மே
மாதத்திற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல
காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா அவர்கள் பத்திரிகை அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அனைத்து விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெறுவோருக்கு உரித்தான ஓவ்வூதியம் ரூபா 5000/=
என்ற ரீதியில் தமக்குரிய தபால் அலுவலகத்தின் மூலம் மே மாதம் 11, 12 , 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் பெற்றக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைவாக விவசாய ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 1,62,000 பேருக்கும் கடற்றொலாளர்
ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 4907 பேருக்கும் சுமார் 831 மில்லியன் ரூபாவை மே மாதத்திற்காக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய கொடுப்பனவை நாட்டில் உள்ள 4200 தபால் அலுவலகங்கள் மூலம்
செலுத்துவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்வதற்கு தபால் மா அதிபரின் விசேட அனுசரணையின் கீழ் தபால் திணைக்களம்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏதேனும் அல்லது அவசர நிலையின் அடிப்படையில் தமது எல்லைப் பிரதேசத்திற்கான
சம்பந்தப்பட்ட தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தமது ஓய்வூதிய கணக்குப் புத்தகத்தை அவசரகால அனுமதிப்
பத்திரமாக பயன்படுத்த முடியும் என்பதுடன் ,ஏதேனும் அல்லது போக்குவரத்து சிரமங்களினால் ஓய்வூதிய பயனாளிகளுக்குப்
பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகத்தின் மூலம்
பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பொருத்தமான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும் என்றும் கமத்தொழில்
மற்றும் கமநல காப்புறுத்திச் சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேதமசந்திர ஹெப்பா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.