விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி,கொலண்ட் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் புங்கிடுதீவை சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .
இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது .
தனது வாகனத்தில் வீடு நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பொழுது ,அல்கமார் ,ரவுண்ட போர்ட் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார் .
பலியானவர் ஒரு பெண் குழந்தையின் தந்தையான டியே மாஸ்டர் என அழைக்க படும் சஞ்சிஜீவ் அமிர்தராஜா என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
குறுகிய காலத்தில் மிக பெரும் சாதனைகளை படைத்து மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த ஒருவராக சஞ்சிஜீவ் அமிர்தராஜா காண படுகின்றார் .
இசைதான் அவனது உலகம்,வாழ்வியலின் தத்துவத்தின்
தந்தை என மக்களால் அறியப்பட்டவர்,வாழ்க்கை
புனிதமானது.வாழ்ந்து காட்டுவதே…சிறப்பு என்று.. தினம்.. சொல்லு பவன்..
அவ்வாறான அற்புத திறமையான ஒருவனை எமது மண் இழந்து நிற்பதாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .
பல கனவுகளை சுமந்து ,இசையோடு பயணித்தவன் ,இன்று இளம் வயதில் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்துவிட்டான் .
இவர் கொலண்ட் நாட்டில் வசித்து வரும் பாவலர் புங்கையூர் ராஜாவின் அருமை புதல்வனாவார் .
நாடகம் , பாடல் ,கவிதை , என பல்வேறு பட்ட ,கலை பண்புகளை சுமந்து பயணிக்கும் படைப்பாளி புங்கையூர் ராஜா ஒருவர் ,தனது மகனை இழந்து கண்ணீரில் தவித்து வருகிறார் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வேளை ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தினருடன் எதிரி இணையமாகிய நாமும் பங்கெடுத்து .கொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர் .
- வன்னி மைந்தன் –
- யாழில் பணத்தை எரித்த தமிழர்
- அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
- வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
- பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
- மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
- கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
- சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
- பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
- இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
- விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை