விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
Spread the love

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா ,வைத்தியர் ஷாஃபியும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும்.


எவ்வாறு வைத்தியர் ஷாப்பியை சுகாதார அமைச்சு மூன்று வருடங்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பி மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மன்னிப்பு கோரி சேவையில் இணைத்துக் கொண்டதோ..


எவ்வாறு சாஃவி அவர்களின் உன்னதமான மருத்துவ சேவையை சுகாதார அமைச்சு கேள்விக்குறியாக்கியதோ..
அவ்வாறே..


சுகாதார அமைச்சு இன்றோ நாளையோ எனக்கு கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகிறேன்..


அப்படியாயின் அந்த நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் இலவச மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படும்..


யாராவது பிரைவேட் வைத்திருப்பவர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்..
நான் எந்த கட்டணமும் இன்றி நோயாளர்களை பார்வையிடுவேன்..
உங்களுடைய கட்டணங்களையும் மருந்து செலவுகளையும் அறவிட்டு கொள்ளுங்கள்..


அசாத் அவர்களின் தொலைபேசி உரையாடலை நான் வெளியிட்ட பின்பும் மன்னார் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் அல்லது குற்றம் இழைத்தவன்

என்று நிரூபிக்கப்படாத விடத்தும் சுகாதார அமைச்சு என்னை குற்றம் செய்தவர் என கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகின்றேன்..
நல்ல விடயம்..


சுகாதார அமைச்சுக்கு..
அமைச்சின் செயலாளருக்கும்..
நாட்டின் மாண்புமிகு மிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும்..
என்னை கொண்டு வருவேன் என்று ஏமாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த்த அவர்களுக்கும்.


சும்மா ஒரு..
எப்படி வசதி?
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா…இவ்வாறு முகநூலில் பதிவு ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ளார் .