விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு

Spread the love

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு… காரணம் தெரியுமா?
விஜய் – யுவன் சங்கர் ராஜா


விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா

ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply