வா

வா
Spread the love

வா ….

முடியும் என்று சொல்ல வா
முடியாது என்று சொல்ல வா
முடியும் என்றே வெல்ல வா
முன்னேற துணிந்து வா

நடக்கும் போது வலிக்கும் வா
நாடே அழைக்குது எழுந்து வா
வீரம் உன்னில் இருக்கு வா
விடுதலை காண ஓடி வா

சாக துணிந்த கூட்டம்
சாதனை படைக்கிற கூட்டம்
வேரை அறுத்து முடங்கு மா
வேங்கை ஓட தயங்கு மா

என்னை படித்து கிழிக்கிற
என்ன எழுதி கிழிக்கிற
உன்னை நம்பி எழுந்து வா
உள்ளம் தூய்மை கொண்டு வா

கொடி கட்டு பறக்கலாம்
கோட்டை வா பிடிக்கலாம்
நடை கட்டு வெல்லலாம்
நாடே நீ ஆழலாம்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-12-2023