வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்
Spread the love

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்

வாலிபர்கள் வாகன விபத்தில் காயம் ,இராணுவ வாகன மோதி இரு வாலிபர்கள் காயம் .

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியது .

புன்னாலை கட்டுவான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர்கள் மீது திடீரென இராணுவ வாகனம் மோதியது .

இதன் பொழுது இரு வாலிபர்களும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மோட்டார் சைக்கிள் பலத்த சேதம்

மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வேகமாக பயணித்த இ ராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது ராணுவத்தினுடைய வாகனங்கள் வேகமாக செல்வதும் அதில் பயணிகளுடைய வாகனங்கள் மோதுண்டு மக்கள் இறந்தும் வாகனங்கள் சேதமாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இராணுவத்தினருடைய தேவைகள்

பல வருடங்களாக யுத்த முடிவுற்ற பொழுதும் ,ராணுவத்தினருடைய தேவைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளதாக இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து வருகின்றது.

அவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் மிக வேகமாக பயணிப்பதும் அதனால் வீதி விபத்துக்கள் இடம் பெறுவதும் மக்கள் சொத்துக்களுக்கும் மக்களது உயிரிழக்கும் இந்த ராணுவ வாகனங்களால் ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரு ராணுவ வாகனத்தில் பயணிகள் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து சம்பவம் தொடர்பான விடையங்கள் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு எதிரான எண்ண அலைகளை தூண்டி வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன .