வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
Spread the love

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம் புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் வாலிபன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .

நீரோடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன் சடலம், மருத்துவ மரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து வர பட்டது .

வாய்க்காலில் மீட்க பட்ட வாலிபன் சடலம்

வாய்க்காலில் மீட்க பட்ட 24 வயதுடைய வாலிபன் அதே பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

எமது பிள்ளை எப்படி இறந்தான் என்பது தொடர்பாக விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து ,சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ,பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுத்துள்ளனர் .

குறித்த இளம் வாலிபன் சடலமாக வாய்க்காலில் இருந்து மீட்க பட்ட சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறும் காட்சிகள், மக்களை துயரில் .ஆழ்த்தியுள்ளது

மிரட்டும் மர்ம படுகொலைகள்

இலங்கையை மிரட்டும் மர்ம படுகொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை ,இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முடியாது திணறி வருகிறது .

துணிகரமாக நடத்த படும் இவாறான படுகொலைகள், மக்கள் நின்மதியாக வாழும் வாழ்தலுக்கு, அச்சுறுத்தலாக காணப்படுகிறது .

மக்களை அச்சத்தில் வைத்து கொள்ளும் திட்டமிடப்பட்ட, படுகொலைகளாக இவை காண படுகின்றன .

ஆட்சியாளர்கள் மக்களுக்கு அச்சத்தை விதைத்து, ஆண்டுகள் ஆண்டுவிட துடிப்பதன் நோக்கம் தான் ,இந்த படுகொலைகளின் தொடர்ச்சி என, மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

இறந்த இந்த வாலிபனுக்கு நீதி வேண்டும் என, அவர் தம் குடும்பங்கள் வேண்டி நிற்கின்றன .

படுகொலைகள் பல தற்கொலை என கூறி, வழக்குகள் மூட பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் சிலர் ,தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .