வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா
வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா ,வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி பொலிஸ் அரண் வரை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குளிப்பு நிலையத்தின் பெயர், பின்வரும் வாகனத்தின் எண் மற்றும் வாகனத்தில் உள்ள
பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளிட்ட விரிவான தகவலை அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரால் வாக்களிப்பு தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.
அதற்காக வழங்கப்படும் வாகன உரிமத்தை சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரரேஷ்ட வாக்குளிப்பு நிலைய அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டி எந்த மாற்றமும் இன்றி வாக்கு எண்ணும் மையத்தில்
ஒப்படைக்கப்படுமா? என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று மாலை 4:30 மணி வரையில் பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 3,610 ஆகும்.
இதுவரை 3,047 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.