வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
Spread the love

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா இடம்பெற்றுள்ளது .வவுனியா மருக்காரம்பளை அ , த ,க, பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி ஓய்வு பெறும் பணி சிறப்புற இடம்பெற்றுள்ளது .

55 தாவது வயதில் சுய விருப்ப ஓய்வு பெறும் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அவர்களது சேவையை பாராட்டி ,மருக்காரம்பளை பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கௌரவித்தனர். .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி 1990 ஆம் ஆண்டு முதல் ,பாடசாலை அதிபராக பணி புரிந்து வருகிறார் .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அதிபராக விளங்கிய பாடசாலைகள் யாவும் ,அதன் கல்வித்தரம் மற்றும் ,மாணவர்கள் கல்வியல் உயர்வு நிலையில் மிக பெரும் பங்காற்றினார் .

அவ்விதமான சிறந்த சேவை பண்பை கொண்ட அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடை வைபவம், கடந்த தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

சுயவிருப்ப ஓய்வு

தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதாக ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி தெரிவித்துள்ளார் .

தமது பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரிவை எண்ணி, ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணீரில் தவழ்ந்தனர் .

சக ஆசிரியர்களை தனது சகோதர ,சகோரிகளாக கருதி அவர்கள் மீது அன்பு செலுத்தி ,பிரியமுடன் நடந்து கொள்வார் என அங்கு பணியாற்றிய சில ஆசிரியர்கள் நமக்கு தெரிவித்தனர் .

அன்பும் அறமும் ஓங்கும் நிலை கொண்ட மிக நேர்த்தியான சேவையை செய்து ,தமது பாடசாலையை முதன்மை நிலைக்கு எடுத்து செல்ல ,முக்கிய தூணாக விளங்கியவர் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்துள்ளனர் .

நாட்டுக்கு ஒரு தலைவன் போல தமது பாடசாலையின் முழு வளர்ச்சியிலும், பெரும் பங்காற்றியவர் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்து நெகிழ்ந்தனர் .

வறுமையின் கீழ் தவிக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான தனிமனித உதவிகளை புரிந்து ,அவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்திய அதிபர் ,திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடையை ,மகிழ்வோடும் ,துயரத்தோடும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஏற்று கொண்டனர் .

கனமான துயரோடு கண்ணீரால் மலர் தூவி ,விடை பெற்ற வேளையதை விழிகள் இன்னும் மறக்கவில்லை எனவும் ,காலத்தால் அழியாத சாதனையின் நாயகியாய் ,எமது பாடசாலையில் தடம் பதித்து கடக்கிறார் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா