வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
Spread the love

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம் .வவுனியாவில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

பாடசாலைக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற இளம் தாய் ஒருவர் தற்பொழுது பிள்ளைகளுடன் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய இளம் தாயும் அவரது 11 மற்றும் 8 வயது உடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர்கள் குடும்பத்தினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

கோவிலா புதுக்குளம் பகுதி குடும்பம் மாயம்

கோவிலா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்ப உறவுகளே காணாமல் போயிருந்தார் .

இவர்கள் கடத்தப்பட்டார்களா, அல்லது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்களா ,அல்லது வேறு இடங்களுக்கு ஏதும் சென்றார்களா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இலங்கையில் காணாமல் போகின்ற இவ்வாறான பல நபர்கள் இறுதியில் சடலங்கலாக மீட்க கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

கடத்திச் செயல்படுவது மற்றும் ,வாகனங்கள் ஊடாக அவர்களை அடித்து விபத்தில் இறந்ததாக தோற்றப்பட்ட ஏற்படுத்தி, படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.

அவ்வாறன நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தாயும் காணாமல் போயுள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களையம் வவுனியாவில் காணவில்லை

32 வயதுடைய இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களுமே காணாமல் போய் உள்ளனர்.

காணாமல் போன இவர்கள் சம்பவம் அந்த பாவனையா பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவியது .

அடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் காணப்படுகின்றது .

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் போலீசார் மற்றும்குற்றவியல் தடுப்பு பிரிவு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இவர்கள் பாடசாலை சென்று வந்த பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்யப்பட்டு அதிலிருந்து தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன .

இலங்கையில் தொடராக இவ்வாறு காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்து வருவதும்,

வீதி ஓரங்களில் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவர்களில் இருந்து நாள்தோறும் சடலங்களும் எடுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இலங்கை செல்லும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .

காணாமல் போன இவர்கள் பத்திரமாக கண்டுபிடிப்பார்களா ,அல்லது அவர்கள் சுடலங்களாக மீட்கப்படுவார்களா என்பது மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக காணப்படுகின்றது.