வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்

வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
Spread the love

வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்

வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம் , இடம்பெற்றுள்ளது .டிக்டாக் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரான்ஸை சேர்ந்த ராசன் என்பவரையே கைது செய்யக்கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது .

காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்கி அப்பாவி மக்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்க பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

எப்படி பிரச்னை ஆரம்பித்தது ..?

டிக்டாக் ஊடக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராசன் .பாதிக்க பட்ட மக்களுக்கு குடி நீர் கிணறுகள் அமைத்து கொடுத்து ,அதன் ஊடாக மக்களுக்கு அளப்பெரும் உதவி புரிந்து வருகிறார் பிரான்ஸ் டிக்டாக் ராசன் .

இவரது காணொளிகளை டிக்டாக் ஊடாக பார்வையிடும் மக்கள் ,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருகின்றனர் .

வவுனியால் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்

அவ்வாறு மக்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,மக்களுக்கு அளப்பரிய உதவிகளை செய்து வருகிறார் .

100 குழாய் கிணறுகளை பிரான்ஸ் டிக்டாக் ராசன் நிறுவி கொடுத்துள்ளார் .

இவ்வாறன கால பகுதியில் நூறாவது குழாய் கிணறு நிறுவ பட்ட நிகழ்வு பெரும் கோலாகலமாக நடத்த பட்டது .

வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஓன்றில் சிறப்பு விருந்தினராக இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டு இருந்தார் .

அந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் டிக்டாக் ராசன் எவ்வாறு அழைக்க படுவார் என்ற கேள்வியை சமுக நல ஆர்வளர்கள் எழுப்பினர் .

மதுபோதை அருந்தி காணொளி

தமிழர் கலாச்சார பொது பண்பியலுக்கு எதிராக ,மதுபோதை அருந்தி காணொளி பகிரும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,பொதுவெளியில் மக்கள் நலன் விரும்பி ,சீர்திருத்தவாதி என எவ்வாறு கூற முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர் .

அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் கோபம் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ,அந்த தாக்குதலானது ,புளியம் குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,அதே காவல்துறை முன்பாக நடத்த பதட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதல் ராசன் மற்றும் ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் பெண் ஒருவரும் இணைந்தே கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

வவுனியால் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்

பிரான்ஸ் டிக்டாக் ராசனை உடனே கைது செய்

அதனை அடுத்தே தற்போது பிரான்ஸ் டிக்டாக் ராசன் உடனே கைது செய்யப்பட வேண்டும் என வவுனியாவில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது .

மூன்று நாட்களுக்குள் ராசான் கைது செய்யப்படுவார் என போலீசாரால் தெரிவிக்க பட்டதை அடுத்து ,போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர் .

யார் இந்த லண்டன் கடைக்கார பெண் ..?

லண்டனில் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் .அந்த கடையினை லண்டனில் விற்று விட்டு, வவுனியாவில் தங்கியுளளாரம் .வவுனியால் டிக்டாக் பிரான்ஸ் ராசனுடன் ஒன்று பட்டு நீள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

வவுனியாவில் கோடி ரூபாயில் காணிகளை வாங்கி விட்டுள்ளாராம் இந்த லண்டன் பெண் .இவருக்கு கோடி பணம் எவ்வாறு கிடைத்தது .? என்கிற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

லண்டனில் கடை வைத்து நடத்தி இருந்தால் கம்பெனி கவுசில் இவரது வருமான விடயம் யாரும் பார்க்க முடியும் .அப்படி என்றால் இவர் அதிக இலாபத்தில் கடையை நடத்தி ,அதன் பின்னர் விற்று இருப்பார் .

பல கோடி பணம்

அதனால் பல கோடி பணம் இவர் இலாபமாகவே சேமித்து இருப்பார் .எனவே பிரிட்டன் வருமானவரி திணைக்களம் இவருக்கு எவ்வாறு இவ்விதமான பெரும்

பணம் கிடைக்க பெற்றது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குற்ற சாட்டை பாதிக்க பட்டவர்கள் முன் வைக்கின்றனர் .

மேலும் இலங்கை இலண்டன் தூதரகத்தில் இந்த லண்டன் பெண்ணுக்கு எதிராக பெட்டிசம் வழங்குவதுடன் ,இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தில்

ராசன் தொடர்பான இந்த குற்ற சாட்டு மனு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனராம் .

இலங்கை போலீசாரை வைத்து ,அப்பாவி மக்களை தாக்கியமைக்காக ,லண்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது .

பச்சை மிளகாய் தாக்குகளின் பின்னர் சிக்கிய ராசன்

பச்சை மிளகாய் என்ற டிக்டாக் வாலிபன் ஒருவரை காரில் வைத்து , இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார் .

அந்த விடயம் வரவேற்பையும் ,எதிர்ப்பையும் பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு எதிராக ஏற்படுத்தியது .

குற்றம் புரிந்த பச்சை மிளகாயை கைது செய்த ராசன் ,அவரை காவல்துறையில் ஒப்படைத்து தண்டித்து இருந்தால் ,அவர் மீதான நன்மதிப்பு ,மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கும் .

சட்டத்தை தன் கையிலெடுத்து, பச்சை மிளகாய் என்ற டிக் டாக் பெயர் கொண்ட நபர் மீது, பிரான்ஸ் டிக்டாக் ராசன் வன்முறை தாக்குதல் நடத்தியது மிக பெரும் தவறு என்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து

அதனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார், என்ற கீழ் நிலை பார்வை ராசன் மேல் வீழ ஆரம்பித்தது .

அதன் பின்னர் வவுனியா பகுதி பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக ராசன் அழைத்து கவுரவிக்க பட்ட செயலும் கண்டனங்களுக்கு உள்ளாகின .

இப்பொழுது புளியங்குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,ராசன் ,மற்றும் லண்டன் பெண் ஆகியோர் தாக்குதல் நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்க பட்டுள்ளது .

மக்கள் சேவை ஆற்றிட மகத்துவம் தேடி சென்ற பிரான்ஸ் டிக்டாக் ராசனின் , சில சிந்திக்காத செயல்கள் ,தொலைதூர முற்போக்கு பார்வை அற்ற நிலையால் ,இன்று இவ்வாறு அவர் மீதான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துள்ளது .

பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது எச்சரிக்கை

பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது ,இவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பும் ,அதனை முன்கூட்டி அனுமானித்து அவற்றை தவிர்த்து சென்றிருந்தால் இந்த நிலை பிரான்ஸ் டிக் டாக் ராசனுக்கு ஏற்பட்டு இருக்காது .

பிரான்ஸ் டிக்டாக் ராசன் மிக சிறந்த அன்பான மனிதர் எனவும் ,அவரை தவறான வழியில் அவரை சிக்க வைத்து ,சிக்கலில் மாட்டி விட்டது ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள கடை நடத்திய பெண் என்ற குற்ற சாட்டு பாரதூரமாக முன் வைக்க படுகிறது .

ஆதலால் அந்த லண்டன் பெண்ணுக்கு பெரும் தொகையில் பணம் கிடைத்தது எப்படி என்பதை, பிரிட்டன் வருமான துறை விசாரணைகளை மேற்கொண்டால் ,விடயம் தெரியவரும் என மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .

குற்றம் சுமத்த பட்டுள்ள ராசன் லண்டன் பெண் ஆகியோர் எம்மோடு உங்கள் பக்க விடயங்கள் தெரிவிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .

சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன்

சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன் மீது இவ்விதமான எதிர்ப்பு கிளம்பிட காரணம் என்ன என்பதை ,அவரது உற்ற நெருங்கிய விசிறிகள் ,விசிறி விடயத்தை கண்டறிக .

பொறிக்குள் ராசனை சிக்கவைத்து ,இன்று இந்த தலைகுனிவை அவருக்கு ஏற்படுத்தியது யார் என்பதை ,ராசனுடன் பயணிக்கும் ,விசிறிகள் ஆராய வேண்டும் என்பதே நமது அவா .