வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்
Spread the love

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல் ,ஹவுதி படைகளின் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் பற்றி எரிகின்றன.

ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் உடைய ஆதரவு சரக்கு கப்பல்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் கப்பல் ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல்கள் இரண்டும் பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமும் இந்த இரண்டு கப்பல்களும் எரிவதை ஒப்புக்கொண்டுள்ளன.

கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள்

எனினும் அந்தக் கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக ஏதும் தெரிய வரவில்லை .

காசாவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இஸ்திரேலியா ராணுவத்தின் விசேட கமாண்டோ படையினர் நேற்று சிறை மீட்டு சென்றனர் .

அப்பொழுது அதன் அருகில் தங்கி இருந்த ,அப்பாவி மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .

அந்த மக்கள் படுகொலைக்கும், இன அழிப்புக்கும் எதிராகவே,செங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ,இந்த சரக்கு கப்பல்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பல்கள் தீயில் எரிவு

மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் ,இரண்டு கப்பல்கள் தீயில் எரிந்து கொண்டதாக தாக இஸ்ரேலிய ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் காசாவுக்கு இடையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காசாவின் பல்வேறுபட்ட பகுதிகள் இதுவரை சுடுகாடாக காட்சி அளிக்கின்றது .

அகதிகளாக வீதிகளில் தாங்கியுள்ள மக்கள் மீது, இஸ்திரேலியா படைகளது செங்கடல் மற்றும் இடன் வளைகுடா பகுதியில் ,பயணிக்கும் சரக்கு கப்பல்கள் ராணுவ காப்பல்களை இலக்கு வைத்து ,தொடர் தாக்குதலை ஹவுதிகள் நடத்திக் கொண்டு உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ