வரணி மருத்துவமனை-மருத்துவர் அடாவடி -மூதாட்டி -கர்ப்பிணி பெண் பலி

Spread the love

வரணி மருத்துவமனை-மருத்துவர் அடாவடி -மூதாட்டி -கர்ப்பிணி பெண் பலி

இலங்கை -யாழ்ப்பாணம் வடக்கு வரணி மருத்துவமனையில் சமீபகாலமான செயல்பாடுகள் நோயளர்கள் மத்தியில் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .வியாழக்கிழமை கிளினிக்கில் இடம்பெறுவதால் வெளிநோயாளார்களை இரண்டு மணிக்கு வரும் படி திருப்பி அனுப்பி விடப்படுகின்றனர் .

,இதனால் நோயாளர்கள் பெரும் அவதி பாடுகின்றனர் ,அவ்வேளை வாழைத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கடுமையான நோயால் அவதி பட்டு அங்கு அழைத்து வரப்பட்ட பொழுது சிகிச்சை அளிக்காது திருப்பி அனுப்பி விட பட்டதால் அவர் பருத்துறை ஆதார வைத்திசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார் .

.அதன்பின்னர் இங்கு கிளினிக்கு வந்த இயற்றாலையை சேர்ந்த 24 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் காய்ச்சல் நோயினால் பாதிக்க உரிய சிகிச்சை மேற்கொள்ளாததினால் இறந்துள்ளார் .

தொடர் அச்சுதன் என்பபடும் பொறுப்பான மருத்துவரின் அடாவடிகளினாலும் ,அவர் கடமைக்கு தாமாதமாகி வருவதாலும் நோயாளர்கள் காத்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது ,

இவரது தொடர் அடாவடியால் நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிக்க பட்டு வருகின்றனர் ,அவசர நோயாளர் காவு வண்டியும் (அம்புலன்ஸ் ) அவசர நோயாளர்களுக்கு அனுப்ப படுவதில்லை ,

அங்கு பணியாற்றும் குடும்ப நல வைத்திய பெண்மணியே ஆம்புலன்சில் செல்ல அனுமதிப்பதில்லை ,ஆட்டோவில் செல்லுங்கள் என திட்டி அனுப்பி விடுகின்றார் ,இவ்வாறான அடாவடிகள் தொடர்ந்து இடப்பெற்று வரும் நிலையில் இவரை தண்டிக்க யாரும் முன்வருவதில்லை ,

சுகாதார அமைச்சர் இவருடன் நெருக்கமாகி உள்ளதால் இந்த இழி செயலை இவர் மேற்கொண்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்த நிலைகளை எடுத்து கூற அங்குள்ள ஊடகங்களும் தாயார் நிலையில் இல்லை .சாம்பந்த பட்ட சுகாதார அதிகாரி இவருக்கு தகுந்த தண்டனை தருவாரா ..? இந்த இரு உயிர் இழப்புக்கு உரிய விசாரணைகள் நடத்த படுமா ..? இவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ..? . நல்ல மருத்துவரை இங்கு அமர்த்தி இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply