வன்முறை கும்பல் தாக்குதல்

வன்முறை கும்பல் தாக்குதல்
Spread the love

வன்முறை கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் .

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் உடைமைகள் என்பனத்தை தாக்கி அழித்து சென்றுள்ளது.

அச்சுவேலி பத்மமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதிபனின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீன் தொட்டிகளை அடித்து உடைத்து

வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் மேற்கொண்டுள்ளது வீட்டில் ஜன்னல்கள் கண்ணாடிகள் மீன் தொட்டிகளை அடித்து உடைத்து வீட்டின் வரவேற்புரையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அடித்து தீ வைத்து சென்றுள்ளனர் .

மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வன்முறை கும்பலின் தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக இவர் செய்தியை பிரசுரித்ததே இதற்குரிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

திரு நங்கைகளில் உணவுகளை தவறாக சித்தரிக்காதே என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வீட்டில் வீசி விட்டு குறித்த கும்பல் சென்றுள்ளது .

மூன்றாம் பாலினத்தின் உடைய நடவடிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் கடுமையான விமர்சனங்களை வைத்து ,அந்த பாலினத்தை இழிவு படுத்தியதாகவே தாக்குதலை நடத்திய குழு தெரிவித்துள்ளது .