வந்து விடு

வந்து விடு
Spread the love

வந்து விடு

ஒத்தவரி நீயுரைத்தால்
ஓடினான் வருவேனே
பத்தடி தூரத்திலே
பார்த்துதான் நிற்பேனே

எட்டுமாத கருபோல
எடினான் சுமந்தேனே
ஆழ மனதில்
அடி பதியம் வைத்தேனே

கட்டுடைத்து பாயுதடி
காதல் வெள்ளம்
சொத்து வேணாண்டி
சொந்தமா வாவேண்டி

அப்பன் காசு வேணாண்டி
அவர் வேர்வை வேணாண்டி
முதுகெலும்பு உள்ளவனே
முதுகிலுனை சுமப்பேனே

பாத்திரங்கள் வாங்கிவிட
பாதுகாசு போதுமடி
சொத்தெழுதி தரவேண்டாம்
சொந்தமா வாவேண்டி

நீயும் நானுமே
நிலவொளியில் காய்வோமே
காலம் முழுதும்
காதலித்தே வாழ்வோமே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-06-2024