வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து
இதனை SHARE பண்ணுங்க

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

ஆண்ட பரம்பரை வீழ்ந்து படுத்தது
ஆண்ட தேசத்தில
அடிமையானவர் அடக்கியாண்டவர்
ஆள்கிறான் தேசத்தில

இங்கிலாந்திலும் இந்து ஆளலாம்
இங்கு நெறி இருக்கு
இன்று ஆளும் ரிஷி சுனெக்
இந்து தருமத்தில் இருக்கு

முந்தி வந்தெம்மை ஆண்டு மகிழ்ந்தவன்
முன்னே விழிக்கிறான்
முன்னேற்றம் காண நிலையிலே
முன்னேறி ஆள்கிறான்

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

வந்தவர் இங்கு ஆளும் புலமை
வாயிலில் இருக்கு
வாய் உரைக்கும் மொழியின் புலமை
வளத்தில் நிறைந்திருக்கு

ஈர் நூறண்டு வரலாறு
இன்று உடைந்தது
இங்கிலாந்தின் இளம் வயது
இவன் என்றே மலர்ந்தது

முதல் இந்திய குடிமகன்
முன் பெயரே ஒலித்தது
வந்தேறி குடி மகன் ஆளும்
வசதி நெறி கிடைத்தது

இந்திய நாடு இலங்கையில்
இது போலொரு நெறி உண்டோ
இங்கிலாந்தின் ஆட்சி முறை
இனியேனும் பற்றுமோ …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-10-2022
இங்கிலாந்தை ஆளும் இந்திய பிரதமர் ரிஷி சுனெக் 25/10/2022 பதவி ஏற்ற பொழுது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply