வடக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கோட்டாவுடன் பேசுவேன் – விக்கி
வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.