வங்கி உடைத்து தங்கம் திருட்டு

வங்கி உடைத்து தங்கம் திருட்டு
Spread the love

வங்கி உடைத்து தங்கம் திருட்டு

வங்கி உடைத்து தங்கம் திருட்டு ,கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலவான பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 33 வயதுக்குட்பட்ட இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

68,978,357 ரூபா பெறுமதியான கழுத்தணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ்லட், காதணிகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும்

சிசிரிவி அமைப்பின் டெகோடர் ஆகியவை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் விசேடமாக மேற்கொண்டு வருகின்றனர்.