லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம்

லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம்
Spread the love

லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம்

லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம் ,லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர்

கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காஸாவில் ஹமாஸ் படையுடனான இஸ்ரேலின் சண்டையைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, கைப்பேசிகளைப் போலவே உள்ள ல்பேஜர்ஸ்ல் என்றழைக்கப்படும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வெடிக்கச் செய்திருப்பதாக ஹிஸ்புல்லா குற்றஞ்சாட்டியுள்ளது.

லெபனானில் பல்வேறு பகுதிகளிலும் பேஜர்ஸ் கருவிகள் வெடித்திருப்பதால் பலர் காயமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கள

நிலவரங்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த மின்னணு சாதனங்களில் பொருத்தப்படுள்ள லித்தியம் பேட்டரி வெடித்ததே ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட முக்கிய காரணம்.

இந்த தாக்குதலில் லெபனானுக்கான ஈரான் தூதர் மோஜ்தாபா அமானி, உள்பட ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களும், ஏராளமான பொதுமக்களும்

காயமடைந்துள்ளனர். ஈரான் தூதர் மோஜ்தாபா அமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பு என லெபனான் அதிகாரிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 8 வயது சிறுமி உள்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ரத்தக்கறையுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளை நாடிச் செல்வதால் லெபனானிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பிவழிவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.