ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம்

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம்
Spread the love

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம்

ரொக்கட் தாக்குதலில் துறைமுகம் சேதம் , கைபா துறைமுக பகுதியை இலக்கு வைத்து கடும் ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமான சர்வதேச கப்பல்கள் வந்து தரித்துச் செல்லும் முக்கிய துறைமுகமாக இது காணப்படுகிறது.

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .

பாய்ந்து வந்த ரொக்கெட்

சரமரியாக பாய்ந்து வந்த ரொக்கெட்டுகளை அயன் டோம் ஏவுகணை சாதனங்கள் தடுத்து நிறுத்தி, சுட்டு வீழ்த்தி உள்ளதாக உள்ளூர் வாசிகள் கருத்துரைத்துள்ளனர்.

எனினும் அயண்டோம் ஏவுகணைகளின் கண்களுக்கு மண்ணை தூவி சில ரொக்கெட்டுகள் துல்லியமாக சென்று இலக்கை சென்றடைந்து தாக்கியதாகவும் ,அதனால் அந்த துறைமுக வட்டார பகுதி அல்லது பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ,சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கைபா துறைமுகம் மற்றும் அதனுடைய சில பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

தாக்குதல் இடம்பெற்ற ஆரம்ப நாட்களில் இந்த பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது.

இஸ்ரேலிய இராணுவத்தின், பாதுகாப்பு துறைகள், ராணுவ மையங்கள், ஆயுத கூடங்கள் ,ஏவுகணை தளங்கள், கப்பல் துறைமுகங்கள் ,விமானத் தளங்கள் ,என பல்வேறுபட்ட முக்கியமான இடங்கள் இங்கே காணப்படுகின்றன.

அவ்வாறான அந்தப் பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது .

வரலாற்று சிறப்புமிகு பகுதி மீது தாக்குதல்

இஸ்ரேலிய நாட்டினுடைய வரலாற்று சிறப்புமிகு பகுதியாகவும் வரலாற்று தொன்மை மிகு பகுதியாகவும் இந்த பகுதிகள் காணப்படுகின்றன.

அவ்வாறான பகுதியை இலக்கு வைத்து கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இந்த கைபா மேற்கு பகுதியில் உள்ள மிக முக்கியமான கேந்திர இலக்குகளை இலக்கு வைத்து எதிரி படைகள் தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது .

சிரியா படைகள் அல்லது ஹவுதி படைகள் ஈராக்கிய போர்படைகள் ஊடாக இந்த தாக்குதல் இடம்பெற்று இருக்க கூடும் என்கின்ற விடயம் வெளியாகி இருக்கின்றது .

எனினும் இதுவரை இந்த பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை .

முழுமையான இழப்பு சேத விபரங்களும் தெரிய வரவில்லை.

வீடியோ