ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்
Spread the love

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிவரும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்பியினுடைய வீட்டிற்கு, முன்னால் சென்ற மர்ம நபர்கள் மிரட்டி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வீட்டுக்கு முன்னால் மோட்டர் சைக்கிள் நம்பர் தகடு மறைக்கப்பட்ட நிலையில் ,வருகை தந்த ஒன்பதுக்கும் மேட்டர் ரவுடி கும்பல் ,அந்த வீட்டுக்கு முன்னால் சுற்றி திரிந்து அவர்களை மிரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று வாகை சூட தயாராகிக் கொண்டிருக்கும் ,ஸ்ரீதரன் எம்பி னுடைய வீட்டுக்கு முன்பாக ,மர்ம நபர்கள் வந்து சென்ற இந்த சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அந்த வீட்டில் பொருத்தப்பட்ட கமராக்களில், இந்த மர்ம நபர்கள் நடமாட்டங்கள் பதிவாகி தற்பொழுது அவை வெளியிடப்பட்டுள்ளது .

சிறிதரன் எம்பியை அச்சுறுத்துவதன் ஊடாக, அவரது வாக்காளர்களை மிரட்டி தமது பக்கம் வாக்குகளை எடுக்கலாம் என்கின்ற நிலையில் ,இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறிதரன் எம்பி தமிழகம் மக்கள் மத்தியிலும் ,தமிழ் மக்கள் மத்தியிலும், மிகப்பெரும் பிரபலம் பெற்று ஒருவராக காணப்படுவதுடன், நேர்மையான அரசியல்வாதியாகவும் ,தமிழர்களினால் கருதப்படுகின்றார்.

புலம்பெயர் தேசத்து மக்களினாலும் மிகவும் ஆதரவு பெற்ற ஒருவராகவும், ஸ்ரீதரன் எம்பி அவர்கள் காணப்படுகின்றார் .

அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினருக்கே ,மர்ம ரவுடி கூட்டங்கள் மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .

பாராளுமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு மிரட்டல் விடப்படுகிறது என்றால் ,சாதாரண மக்களுக்கு இலங்கை எவ்வாறான அச்சுறுத்தல் காணப்படும் என்பது இதன் ஊடாக தெரிகிறது .

யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி 100 கிலோமீட்டர் 100 மீட்டருக்கு அப்பால், போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

100 மீட்டர் இடைவெளியில் காவல்துறையினர், காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில், நம்பர் இலக்க தகடு அற்ற மூன்று மோட்டார் சைக்கிளில் 9க்கு மேற்பட்ட ரவுடிகள் எவ்வாறு இங்கு வருகை தர முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இதே திட்டமிடப்பட்டு அரச கட்சிகளினால் இயக்கப்படுகின்ற, ஒரு மாபியா வாள்வெட்டு து குழுவாக காணப்பட்டுள்ளது எ,ன்பதை இந்த விடயங்கள் ஊடாக கணிக்க முடிகின்றது

இந்தக் குழுக்கள் வந்து சென்றதை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள ,அவரது குடும்பத்தில் ,அச்ச நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.