ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி – சாரதி பலி

ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி - சாரதி பலி
இதனை SHARE பண்ணுங்க

ரயிலில் மோதிய முச்சக்கரவண்டி – சாரதி பலி

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை 6.45 மணியளவில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காலி குமாரி ரயிலில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான தம்மிக்க தேசப்பிரிய உயிரிழந்துள்ளதுடன், 22 வயதான கிரிஷான் மதுசங்க காயமடைந்துள்ளார்.

ரயில் சமிக்ஞை ஒளிரும் போது முச்சக்கர வண்டி கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனை SHARE பண்ணுங்க