ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
Spread the love

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது ,மட்டக்களப்பில், ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.