பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி

Spread the love

பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

வாவ்… வாட்ட மூவி… பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி
ரஜினிகாந்த்


இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை கதையை வைத்து எடுக்கபட்ட திரைப்படம் 83. இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பங்கஜ் திரிபாதி, ஜீவா

போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து எதிர்பார்ப்பு அதிகரித்து

வந்தது. அதன்பிறகு இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து அனைவரையும் அந்த படத்தை பற்றி முணுமுணுக்க வைத்தது.

இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் அவர்களுடைய வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் 83 படம் குறித்து அவருடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, வாவ் வாட்ட மூவி, அற்புதமான திரைப்படம் படத்தில் பணியாற்றிய

அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply