ரஜினிக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளேன் – பாரதிராஜா

Spread the love
ரஜினிக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளேன் – பாரதிராஜா

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்று 70 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ”ரஜினி மிகவும் எளிமையானவர். 16 வயதினிலே படத்திற்காக முதலில் 5 ஆயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. இது சின்ன பட்ஜெட் படம் தான், அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்றேன். இதையடுத்து படிப்படியாக குறைத்து 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

பாரதிராஜா, ரஜினி

அந்த சம்பளத்தில், இன்னும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி வைத்துள்ளேன். இன்றும் ரஜினி என்னிடம், அண்ணே அந்த 500 ரூபாய், என்று விளையாட்டாக கேட்பார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை. கடவுள்களுக்கு உள்ளது போல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி ரஜினியிடம் உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply