ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்
ரசியா இராணுவத்தின் முதல் தர தாக்குதல் விமானமான Su-25 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன்இராணுவம் அறிவித்துள்ளது .
முக்கிய நகர் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திய வண்ணம் பறப்பில் ஈடுபட்ட ரசியா விமானத்தையே உக்கிரேன் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது .
ரசியா விமானத்தை செலுத்தி சென்ற விமானியும் பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது.
இதுவரை இடம்பெற்று வந்த உக்கிரேன் சமரில் 33 500 ரசியா இராணுவத்தை படுகொலை செய்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசியா உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .