யாழ் இராணுவ தளபதி டக்கிளஸ் சந்தித்து பேச்சு
யாழ்ப்பாண மாவட்டத்தின் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட மற்றும் டக்கிளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் பேச்சு இடம்பெற்றுள்ளது .
இந்த பேச்சில் வாள்வெட்டு ,மாட்டு திருட்டு ,காணி விடுவிப்பு என்பன பேச ப் பட்டுள்ளனவாம் .
டக்ளஸ் காரியாலயத்தில் திடீரென இடம் பெற்ற இந்த சம்பவம் தேர்தலை மைய படுத்திய ,நாடகம் ஒன்றை ஆட டக்கிளஸ் திட்டமிட்டு வரும் வேளையில் இந்த கண்துடைப்பு நாடகம் ஒன்று அரங்கேற்ற பட்டுள்ளது .
காணி விடுவிப்பு தொடர்பாக மக்களுக்கு நல்ல விடியல் கிடைக்கும் என கூட்டமைப்புக்கு ரணில் தெரிவித்து இருந்தார் .
அவ்வாறான நிலையில் தற்போது டக்கிளசும் இராணுவத்தை சந்தித்து ,தாம் இராணுவத்துடன் பேசிய நிலையில் காணி விடுவிக்க பட்டது என்கின்ற ,அறிக்கையை விடுவிக்க இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .