யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
வவுனியாவில் யாழ் இந்திய துணைத் தூதரகமும், வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இன்று (29.07) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.
இலவச சித்த மருத்துவ முகாமில் கிசிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டமையுடன் இரத்த அழுத்தம், சங்கரையின் அளவுகள் என்பனவும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இவ் இலவச முகாமினால் அப்பகுதியினை சேர்ந்த மக்கள் பலர் பயனடைந்திருந்தமையுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.
யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
இவ் முகாமில் பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் அவர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன், வடமாகாண சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பரமாரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன், வடமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஜெ.நாமகணேசன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பாடசாலை அதிபர் ராமநாதன் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.