யாழில் மக்கள் போராட்டம்

யாழில் மக்கள் போராட்டம்
Spread the love

யாழில் மக்கள் போராட்டம்

யாழில் மக்கள் போராட்டம் ,யாழ்ப்பாணம் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம் என்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

யாழ் மாவட்ட செயலாளருக்கு முன்பாக இந்த போராட்டத்தினை காணாமல் போனவர்கள் உறவினர்கள் கூடி நின்று இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட மக்களும் தம்மால் ஒப்படைக்கப்பட்ட தமது உறவினர்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது என கேட்டு இந்த மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.

காணாமல் போன உறவினர்கல் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

காணாமல் போன உறவினர்களுடைய அத்தனை உறவுகளும் பிள்ளைகளும் பலியாகி உள்ளதாகவும் அவர்களுக்குரிய மரண சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு கடந்த காலங்களில் இலங்கை அரசுகள் தெரிவித்து வந்தன.

இறுதிப்போரில் காணாமல் போன மக்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாகவும் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்களா என்பது தொடர்பாக அரசு வெளிப்படையாக தெரிவிக்க மறுத்து வருகிறது .

காணாமல்போனவர்களுக்கு இறந்த சான்றிதழை கொடுத்து வருகின்றது .

போரினால் பாதிக்கப்பட்டு தாக்குதலுக்கு பலியான அத்தனை உறவுகளுக்கும் இலங்கை அரசாங்கமே இழப்புகளை கொடுக்க வேண்டும்.

ஆனால் அதனைத் தவிர்த்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் லஞ்ச ஊழலில் பெருக்கி அவர்கள் மகிழ்ந்து வருகின்றனர் .

எங்கள் உறவுகள் எங்கே மக்கள் கேள்வி

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை ,

தனது வயோதிப நிலையிலும் தமது பிள்ளைகள் தமது உறவினர்கள் தம்மிடம் வந்து வந்துசேர்வார்கள் என கருதி இந்த மக்கள் தொடர்ந்து வீதி இறங்கி போராடி வருகின்றனர் .

வெள்ளை வேட்டிகளோ தமது இந்த மக்களுடைய கோரிக்கைகளை கண்டும் காணாத போல நாடகமாடி வருகிறது .

தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவே வெள்ளை வேட்டிகள் தற்பொழுது ஆங்காங்கே அவ்வப்போது பாராளுமன்றத்தில் இடிமுழக்க பேச்சுக்களை முழங்குவதும் பின்னர் அவற்றை மறந்து தமது வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்த படுகிறது .

இந்த அரசியல்வாதிகள் தமது அரசியல் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.