யாழில் பிரபல ரவுடி கைது

யாழில் பிரபல ரவுடி கைது
Spread the love

யாழில் பிரபல ரவுடி கைது

யாழில் பிரபல ரவுடி கைது ,வெளிநாட்டு பணத்தில் கூலிக்கு வாள்வெட்டில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார் .

தப்பி ஓடிய கூட்டாளி ரவுடிகளை தேடி போலீசார் வலை வீச்சு .

யாழ்ப்பாணத்தில் மக்களது சுதந்திர வாழ்விற்கு தடையாக விளங்கி வந்த ,ரவுடி கும்பல் ஒன்று தற்பொழுது பொலிசாரினால் , சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தாக்குதல் நடத்தியமை ,அச்சுறுத்தியமை ,மற்றும் கடத்தி மிரட்டி கப்பம்பறித்தமை ,என்பது தொடர்பான பல்வேறுபட்ட குற்ற சாட்டுக்களின் அடிப்படையில் போலீசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

மேலும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .

வெளிநாட்டில் ரவுடி குழுவின் தாதா

வெளிநாடு ஒன்றிலிருந்து ,ரவுடி குழுவின் தாதா ஒருவரினால், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணத்தில், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது தாக்குதலை நடத்தி அச்சுறுத்தி வந்த நிலையிலே, அவர் தற்பொழுது போலீசார் நாள் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச போலீசாரின் துணையுடன் வெளிநாட்டில் உள்ள ,அந்த மிக முக்கியமான ரவுடி குழுவின் தலைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் tiktok வலைத்தளங்கள், போன்றவற்றின் ஊடாக , மிரட்டல் சம்பவங்கள் ,கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றனவாம் .

அவ்வாறு அவர்கள் ஊடாக ,இலங்கையில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் ,வாகன விபத்து, மற்றும் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு கடத்தல் தாக்குதல் ,மற்றும் தனிநபர் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறான பின்புலத்தில் இடம்பெற்றதாகவே, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது .

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர், தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

இவருக்கு எத்தனை லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, எப்படி வழங்கப்பட்டது ,எதற்காக வழங்கப்பட்டது ,எத்தனை வீடுகள் மீது தாக்குதல் நடத்தி ,மற்றும் குற்ற செயல்களை புரிந்தார்கள்.

என்பன தொடர்பாக தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .

வெளிநாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ளவர்களையும், ஏனைய குடும்பத்தை மிரட்டி ,அடக்கியாலும் நடவடிக்கையில் ,இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

போலீசார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் ,மேலும் அதிக தகவல் வெளிவருகின்ற பொழுது ,வெளிநாட்டு குழுவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .#

இவர்களது வாட்சாப் , வைப்பார் மற்றும் ,சமூகவலைத்தள உரையாடல்கள் யாவும் ,தற்போது பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டும், ஓட்டு கேட்கப்பட்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.