யாழில் இரண்டுமாத சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கோரம்- தாயும் தந்தையும் கைது

Spread the love
யாழில் இரண்டுமாத சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கோரம்- தாயும் தந்தையும் கைது…!

வடமராட்சி – துன்னாலை பகுதியில் இரண்டரை மாதக் குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் துன்னாலை – குடவத்தை பகுதியில் நேற்று (08) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீட்டில் குழந்தையுடன் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது தாயின் கைகளை யாரோ அழுத்துவது போல் தோன்றிய

சமயத்தில் தயார் எழுந்து பார்த்துள்ளார். இதன்போது போது அருகில் குழந்தை இல்லை என்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை தேடிய தாய், குழந்தை கிணற்றில் வீசப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை வீட்டில் இல்லாத சமயத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை

அஜந்தராசா அஸ்வின் என்ற குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தில் தாய் (வயது-20) மற்றும் தந்தையை (வயது-21) கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

Leave a Reply