பெண்ணை நம்பாதே …!

Spread the love

பெண்ணை நம்பாதே …!

மொட்டை மாடியில் காயும் புடவை
போல் ஒரு பொண்ணு போறாளே …
சாளரம் வைத்த சட்டை மாட்டி
சந்தன மேனி நடந்தாளே…..

தேடிய பயணம் பாதியில் விட்டு
தேவதை பின்னால் போனேனே …
ஆனது என்ன அவஸ்தை தானே
அடி வாங்கி தானே கண்டனே …

கோலம் உண்ணும் எறும்பது கொடியது
கோல மயில் பெண் தானே …
காலம் முழுதும் கண்ணீர் சூட்டும்
கருங்கடல் இந்த பெண் தானே …

வழியில் கண்டு நொடியில் மயங்கி
வாழ்வை தொலைத்தவர் ஏராளம் ..
வலியில் தவழ்ந்து நோயில் மிதந்து
வாழ்வது வையம் ஆண் தானே …

ஏதொரு பெண்ணும் தான் புரி தவறை
ஏற்ற தென்றும் இல்லை …
ஆணவர் கிழார் அவரே கொடியார்
அது தான் இந்த பெண் வாதம் …

ஆறா துயரை மீளொரு பொழுதும்
ஆக்கிட இங்கே முனைவார் ..
நோவதை கண்டு நொந்தவர் மனங்கள்
நோயதாம் பெண்ணை நம்பார் …!

-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/07/2018

Home » Welcome to ethiri .com » பெண்ணை நம்பாதே …!

Leave a Reply