மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்
Spread the love

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்

மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம் , இலங்கையின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழரசு கட்சியினுடைய தலைவராகவும் விளங்கி வந்த இரா சம்பந்தன் அவர்கள் தனது 91 வது அகவையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கூட்டமைப்பு சம்பந்தன் மரணம் அவர்கள் குடும்ப உறவினர்களும் இறந்ததை உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் மூத்தவராகவும் தமிழ அரசியல் கட்சிகள் வரலாற்றில் மிக ஆளுமையுள்ள ஒருவராகவும் இரா சம்பந்தன் காணப்பட்டார் .

தமிழீழ விடுதலைப் புலிகள் காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனுடைய தலைவராக இரா சம்பந்தன் நியமிக்கப்பட்டிருந்தார் .

மாற்றுக் குழுக்கள் அல்லது ஒட்டு குழுக்கள் வகையை சேர்ந்தவர் சம்பந்தன்

அன்றைய காலப்பகுதியில் ஒதுக்க பட்டிருந்த அனைத்து மாற்றுக் குழுக்கள் அல்லது ஒட்டு குழுக்கள் என சொல்லப்படுகின்ற மிக முக்கியமான கட்சிகள் ஒன்று இணைக்கப்பட்டு தமிழ் தேசியத்தின் நன்மை கருதி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது .

அதற்கு தலைவராக இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை விஷமத்தனமாக இரா சம்பந்தன் விதைத்து வந்தவர் ஆவர் .

இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக மைத்திரி ஆட்சியில் அங்கம் வகித்தார் இரா சம்பந்தன் ஆவார் .

அவ்வாறு எதிர்க்கட்சியாக அங்கம் வகிக்க பட்ட பொழுதும் ,இரா சம்பந்தன் தமிழருடைய இறையாண்மை மற்றும் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக எவ்விதமான விடையத்திலும் ஒன்றித்து செயல்படாத ஒருவராகவே இரா சம்பந்தன் காணப்பட்டார் .

அவ்வாறு காணப்பட்ட இரா சம்பந்தன் மக்களினால் வெறுக்க பட்ட ஒருவராகவும் கருதப்பட்டு வந்தார் .

சம்பந்தனை துரத்திய மக்கள்

யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானியா பிரதமர் கமரோன் அவர்கள் வருகை தந்திருந்த பொழுது ,காரில் இருந்து இறங்க முடியாது மக்கள் முற்றுகை இட்டு போரை நடத்தி இரா சம்பந்தன்,சுமந்திரனை துரத்தியடித்தனர் .

சுமந்திரன், இரா சம்பந்தன் ,அங்கிருந்து தப்பி ஓடி இருந்தனர்.

எனவே இரா சம்பந்தன் இறுதி நாள் காலப்பகுதியில் சுமந்திரன் இவருக்கு தலைவலி கொடுத்து வந்தார் .

இலங்கை தமிழர் வரலாற்றில் மூத்த அரசியல்வாதியாக வர்ணிக்கப்படும் இரா சம்பந்தன் ,இரட்டை முகம் கொண்டவர் என்பதைஎடுத்து காட்ட .வேண்டும்

அவ்வாறு இரட்டை முகம் கொண்ட இரா சம்பந்தன் தற்பொழுது மரணமாகியுள்ளார் .

இறுதிக்கால பகுதியில் இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கும் மிகவும் சேவகம் செய்து வந்த ஒருவராகவும் இரா சம்பந்தன் காணப்பட்டிருந்தார் .

இறந்த இரா சம்பந்தனுக்கு ஏன் இவ்வளவு விமர்சனம் வைகிண்றீர்கள் என நீங்கள் கேட்டால், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாத ஒரு தமிழ் கட்சி தலைவராக இரா சம்பந்தன் செயலாற்றி இருந்தார் .

உண்மையை நாங்கள் இருட்டிப்பு செய்திட முடியாது .

அதனால் தான் இரண்டு பக்க உண்மைகளும் நாங்கள் இங்கே எடுத்து வைக்கிறோம்.

எனவே இறந்துள்ள இரா சம்பந்தன் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரின் மறைவின் பின்னாலாவது ,இவரை ஆண்ட காட்சிகள் ஒன்றித்து தமிழருக்கு விடுதலை வாங்கி தரட்டும் .இரா சம்பந்தன் விட்ட தவறுகளை மீளவும் நீங்கள் செய்திடாதீர்கள் .