முல்லை விபத்தில் வாலிபன் மரணம்

முல்லை விபத்தில் வாலிபன் மரணம்
இதனை SHARE பண்ணுங்க

முல்லை விபத்தில் வாலிபன் மரணம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் பயணித்த உந்துருளிகள் இரண்டு விபத்தினை சந்திந்துள்ளன.

உந்துருளியில் பயணித்த 23 அகவையுடைய வள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த டிலுக்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளார்கள்.

முல்லை விபத்தில் வாலிபன் மரணம்

காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக 23 அகவையுடைய சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த இளைஞன், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் மரண
விசாணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனை SHARE பண்ணுங்க