முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
Spread the love

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி ,மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பொலிஸ் பிரிவு

நேற்று (25) இரவு ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளை, பங்கெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.